ஹாலிவுட்டின் முக்கியமான ஆக்ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸ். படங்களில் இவர் துப்பாக்கியை இடது கையில் பிடித்து சுடும்விதம் அலாதியானது. துப்பாக்கியை ஸ்டைலிஷாக கையாளும் நடிகர்களில் புரூஸ் முக்கியமானவர்.
டை ஹார்ட் சீரிஸ், ரெட், 12 மங்கீஸ், பல்ப் பிக்ஷன், தி ஜாக்கல் உள்பட ஏராளமான முக்கியமான படங்களில் புரூஸ் வில்லிஸ் நடித்துள்ளார். தி ஜாக்கல், மெர்க்குறி ரைசிங், அர்மகெடான் என 1997 - 98-ல் புரூஸின் கொடி உச்சத்தில் பறந்தது. சில்வஸ்டர் ஸ்டாலோனின் தி எக்ஸ்பென்டபிள்ஸில் கௌரவ வேடத்தில் தோன்றினார். அதன் இரண்டாம் பாகத்தில் பிரதான வேடம் ஒன்றை செய்தார். மூன்றாம் பாகத்தில் நடிக்க அவர் கேட்ட சம்பளம் அதிகம் என சில்வஸ்டார் ஸ்டாலோன் அவரை நிராகரித்தார். இந்த விஷயம் அப்போது சர்ச்சையானது.
சமீபத்தில் புரூஸ் வில்லிஸ் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. எனினும் ஆறு படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு Aphasia எனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது மூளை செல்களில் ஏற்படும் பாதிப்பால் ஒருவர் தனது கம்யூனிகேஷன் திறமையை இழப்பதாகவும். பேச்சில், எழுத்தில் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் ஏற்படும்.
இரவில் பாலக்காடு கோயில் விசிட்... கவனம் பெறும் அஜித் புகைப்படங்கள்!
இதனைத் தொடர்ந்து புரூஸின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து ஒரு ஸ்டேட்மெண்டை வெளியிட்டுள்ளனர். அதில் இனி புரூஸ் வில்லிஸ் நடிக்க மாட்டார் என தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள புரூஸ் வில்லிஸின் ரசிகர்களுக்கு இது சோகமும், ஏமாற்றமும் தரும் முடிவு.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.