கடாரம் கொண்டான், ஆடை ஆகிய படங்களுக்கு போட்டியாக களமிறங்கிய தி லயன் கிங்!

தி லயன் கிங் திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு அரவிந்த் சாமி, சித்தார்த், ரோபோ ஷங்கர் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 19, 2019, 9:25 AM IST
கடாரம் கொண்டான், ஆடை ஆகிய படங்களுக்கு போட்டியாக களமிறங்கிய தி லயன் கிங்!
தி லயன் கிங்!
Web Desk | news18
Updated: July 19, 2019, 9:25 AM IST
விக்ரம், அமலாபால் ஆகியோர் திரைப்படங்களோடு இன்று தி லயன் கிங் திரைப்படமும் வெளியாகியுள்ளது.

2011-ம் ஆண்டு வெளியான தெய்வத்திருமகள் திரைப்படத்திற்கு பிறகு விக்ரமுக்கு வெளியான திரைப்படங்கள் பெயர் சொல்லும்படி அமையவில்லை. இதனால் கட்டாய வெற்றிக்காக போராடி வரும் விக்ரம் நடிப்பில் இன்று கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாகி உள்ளது.

‘ஸ்டைலிஷ் விக்ரம்’... கடாரம் கொண்டான் கலக்கல் புகைப்படங்கள்!


தூங்காவனம் திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளான அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதேபோல அமலாபால் நடிப்பில் டீசரிலேயே சர்ச்சைகளை ஏற்படுத்திய ஆடை திரைப்படமும் இன்றுதான் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசருக்காக அமலாபால் ஆடையின்றி தோன்றிய காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

வீடியோ வெளியிட்டதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட 'ஆடை' பட இயக்குநர்

Loading...

மேலும் படத்தின் ட்ரைலரில் புகை பிடிக்கும் காட்சியிலும், மது அருந்தும் காட்சியிலும் தோழிக்கு முத்தமிடும் காட்சியிலும் நடித்து அமலா பலவிதமான பரபரப்பைக் கூட்டியிருந்தார். இந்நிலையில் ஆடை திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

இதே போல சுமன் நடிப்பில் உணர்வு என்ற சிறிய பட்ஜெட் திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. இந்த தமிழ் திரைப்படங்களுக்கு போட்டியாக ஹாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள தி லயன் கிங் என்ற அனிமேஷன் திரைப்படமும் இன்றுதான் திரைக்கு வந்துள்ளது.

புகழ்பெற்ற காமிக் கதாபாத்திரமான சிம்பாவை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு அரவிந்த் சாமி, சித்தார்த், ரோபோ ஷங்கர் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.</
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...