ஹிட் & ரன் ஆகஸ்ட் 6 நெட்பிளிக்ஸில் வெளியானது. இஸ்ரேலையும், யுஎஸ்ஸையும் மையப்படுத்தி இந்த த்ரில்லர் வெப் தொடரை எடுத்துள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் ஓடிக்கூடிய ஒன்பது எபிசோடுகள்.
ஹிட் & ரன்னை ஏன் பார்க்க வேண்டும் என்றால் , முதலாவது காரணம் , எங்கும் சோர்வடையவிடாமல் பரபரவென நகர்ந்து செல்லும் கதை . குறிப்பிட்ட இடைவெளியில் எதிர்பாராத திருப்பங்களும் உண்டு . சிலவற்றை யூகிக்க முடிகிறது என்றாலும் சுவாரஸியத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லை .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இஸ்ரேலின் இரண்டாவது பெரிய நகரமான டெல் அவிவில் டூர் கைடாக இருக்கிறார் செகவ் . அவரது மனைவி ஒரு நடனக் கலைஞர் . அமெரிக்கர் . செகவுக்கு முதல் மனைவி மூலம் ஒரு பெண் குழந்தையும் உண்டு . அமெரிக்காவில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிளம்பும் செகவின் மனைவி கார் விபத்தில் கொல்லப்படுகிறார் . அவரை மோதிய கார் நிற்காமல் செல்கிறது . செகவின் மனைவி இறந்து போகிறார் .
இந்த ஹிட் & ரன்னை விசாரிக்க ஆரம்பிக்கிறார் செகவ் . அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் . பல வெளிநாடுகளில் , பல துறைகளில் பணிபுரிந்தவர் . அவரது இறந்தகால வாழ்க்கையில் ஒரு எதிரியும் அவருக்கு உண்டு . அவன் இருப்பது அமெரிக்காவில் . தனது மனைவியை இடித்துவிட்டுச் சென்ற காரில் இருந்தவர்கள் இரு அமெரிக்கர்கள்என்பதை தெரிந்து கொள்ளும் செகவ் அமெரிக்கா கிளம்புகிறார் . அனைத்துக்கும் அந்த எதிரிதான் காரணம் என .
ஆனால் , அமெரிக்காவில் அவருக்கு அதிர்ச்சிகள் அடுத்தடுத்து காத்திருக்கின்றன . அவர் நினைத்தது போல் அது பழிவாங்க நடத்தப்பட்ட விபத்து அல்ல . யுஎஸ்ஸின் சிஐஏ க்கும் , இஸ்ரேல் உளவுப்பிரிவு மொசாட்டுக்குமான பனிப்போரின் விளைவு அந்த மரணம் . இதுவரை தான் உண்மையென வாழ்ந்ததெல்லாம் - மனைவி உள்பட - ஒரு பெரிய அரசியல் விளையாட்டின் புனைவு என்பதை செகவ் அறிந்து கொள்கிறார் .
Also read... Neeraj Chopra: என் பயோபிக்கில் நீரஜ் தான் நடிக்க வேண்டும்: அக்சய் குமார்
ஹிட் & ரன் கதையே கொஞ்சம் ஆச்சரியமானதுதான் . யுஎஸ்ஸும் , இஸ்ரேலும் நட்பு நாடுகள் . உளவு ரகசியங்கள் , ராணுவ தளவாடங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்பவை . வெளியே கை குலுக்கிக் கொண்டு , திரைமறைவில் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் உளவுப் பார்க்கின்றன என படம் எடுப்பது சாதாரணமில்லை . யுஎஸ் , இஸ்ரேல் இரு நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதாகிவிடும் . ஆனால் , அங்கு அதை படைப்பு சுதந்திரம் என எடுத்துக் கொள்கிறார்கள் . இல்லையென்றால் இந்த தொடரே வெளியாகியிருக்காது .
இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட் குறித்து நிறைய சாகஸக் கதைகள் உலவுகின்றன . உலகின் தலைசிறந்த உளவுப்பிரிவுகளில் இதுவும் ஒன்று . 1972 Munich ஒலிம்பிக்கில் பங்கெடுக்கச் சென்ற இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் . அவர்கள் யார் , அதற்குப் பின்னால் இருந்தவர்கள் எவரெவர் என்பதை கண்டுபிடித்து ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரையும் கொன்றழித்தது மொசாட் . ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அதை Munich என்ற பெயரில் படமாக்கினார் . மொசாட்டின் கட்டுப்பாடுகள் , காத்திருப்புகள் மெய்சிலிர்க்க வைக்கும் . இந்தத் தொடரில் நாயகனை மொசாட் ஆள்கள் கொலை செய்ய துரத்துவார்கள் . அதிலிருந்து தப்பிப்பார் . இந்த சம்பவத்தை கேள்விப்படும் யுஎஸ் அதிகாரி , அவன் ( நாயகன் ) இன்னும் உயிரோடு இருந்தால் , கொலை செய்ய முயன்றது மொசாட் இல்லை என்பார் . மொசாட் ஒருவரை குறி வைத்தால் அது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்பதை உணர்த்தும் வசனம் அது .
ஹிட் & ரன்னின் இறுதியில் செகவ் அனைத்து உண்மைகளையும் கண்டறிந்து , சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்க , இது மினி சீரிஸ்தான் , இதோடு இந்தத் தொடர் முடிந்தது என நினைக்கையில் , யாரோ அவரது மகளை கடத்தி விடுகிறார்கள் . அதாவது , எதிரிகள் இன்னும் இருக்கிறார்கள் . தொடர் முடியவில்லை , அடுத்த சீஸன் உண்டு .
அரசியல் படங்கள் இரண்டுவகை . அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் , எதிரிகளை எந்த தந்திரத்தில் தடுத்து ஆட்டத்துக்கு வெளியே நிறுத்துகிறார்கள் , அதற்கு அவர்கள் கொடுக்கும் விலையென்ன , தனி நபரின் அதிகாரவேட்கை நாட்டு மக்களை எப்படி பாதிக்கிறது என தெளிவானஅரசியலை முன்வைப்பவை . ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் போல . இரண்டாவது வகை , புகை மூட்டமாக ஒரு அரசியலை வைத்து , ஆக்ஷன் , த்ரில்லர் என கதைப்பின்னுவது . ஹிட் & ரன் இரண்டாவதுவகை . அடுத்த சீஸனிலாவது முதல்வகையை நோக்கி கதை முன்னேறுமா என பார்க்க வேண்டும் . Published by: Vinothini Aandisamy
First published: August 10, 2021, 11:32 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.