ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹிப்ஹாப் ஆதி பாடல்!

யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹிப்ஹாப் ஆதி பாடல்!

ஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் ஆதி

மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார் ஆதி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடந்த வரைக்குமே என்ற ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.

சிறுவயதிலிருந்து ராப் பாடல் மீது ஆர்வம் கொண்ட ஆதி, தொடர்ந்து பாடல்களை பாடி முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அதில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், கல்லூரியில் படிக்கும் போது பாடிய “கிளப்புல மப்புல” என்ற பாடல், பயங்கர ஹிட் ஆனது.

பின்னர், வாடி புள்ள வாடி என்ற ஆல்பத்தை உருவாக்கிய ஆதி, விஜய் ஆண்டனியின் நான் படத்தில், “தப்பெல்லாம் தப்பே இல்லை” என்ற பாடலை பாடினார். அதைதொடர்ந்து அனிருத்தின் இசையில் எதிர் நீச்சல் படத்தின் டைட்டில் ட்ராக்கையும் , வணக்கம் சென்னை படத்தில் வரும் “சென்னை சிட்டி கேங்ஸ்டர்” என்ற பாடலையும், விஜய்யின் கத்தி படத்தில் “பக்கம் வந்து” என்ற பாடலையும் பாடினார்.

பின்னர் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார் ஆதி. இறுதியாக இவர் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் அன்பறிவு என்ற படம் வெளியானது. தற்போது வீரன், பி.டி.சார் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

மீண்டும் பி.வாசுவுடன் இணையும் ரஜினிகாந்த்?

' isDesktop="true" id="872414" youtubeid="nT8qQmQlTGQ" category="cinema">

இந்நிலையில் தற்போது ஹிப்ஹாப் ஆதியின் ‘நடந்த வரைக்குமே’ என்ற ஆல்பம் பாடல் வெளியாகி, யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema