ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவுள்ள புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது…

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவுள்ள புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது…

ஹிப் ஹாப் தமிழா ஆதி

ஹிப் ஹாப் தமிழா ஆதி

நடிகர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெறுகிறது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹிப் ஹாப் தமிழா ஆதி அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை சிம்பு பட தயாரிப்பாளருடன் இணைகிறார் ஆதி.

ஹிப் ஹாப் தமிழா என்ற பெயரில் ஆதி மற்றும் ஜீவா ஆகியோர் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தனர்.  அதில் ஆதி தற்போது நடிகராகவும் வளர்ந்துள்ளார்.

அவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்கள் வெற்றி அடைந்தன.  அதன் பிறகு சத்யஜோதி நிறுவனம் தயாரித்த சிவகுமாரின் சபதம்,  அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

துணிவு பட புரொமோஷனுக்கு வருமாறு அஜித்திடம் பேசிய உதயநிதி… அஜித்தின் ரீப்ளே என்ன தெரியுமா?

தற்போது மரகத நாணயம் படத்தின் இயக்குநர் ARK.சரவணன் இயக்கத்தில் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோமாளி, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களை தயாரித்த ஐசரி கணேஷ் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

WATCH – வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலிருந்து முதல் பாடல்….

அந்த திரைப்படத்தை கார்த்திக் வேணுகோபால் என்பவர் இயக்குகிறார்.  இவர் ஏற்கனவே நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தை இயக்கியிருந்தார். ஹிப் ஹாப் தமிழா ஆதி மற்றும் கார்த்திக் வேணுகோபால் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நடிகர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெறுகிறது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Hip hop Tamizha