ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹிப் ஹாப் ஆதியின் ‘வீரன்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு…

ஹிப் ஹாப் ஆதியின் ‘வீரன்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு…

ஆதி மற்றும் வீரன் படக்குழு

ஆதி மற்றும் வீரன் படக்குழு

மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் உடன் தற்போது ஹிப்ஹாப் தமிழா இணைந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.  இதற்குப் பிறகு நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம்,  அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  ஆனால் முதல் இரண்டு திரைப்படங்களைத் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.

இந்த நிலையில் மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் உடன் தற்போது ஹிப்ஹாப் தமிழா இணைந்துள்ளார்.  அவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு வீரன் என தலைப்பு வைத்துள்ளனர்.

வேற லெவல் ரிவியூ! கன்னட சினிமாவில் சக்கைப்போடு! தமிழுக்கும் வருகிறது காந்தாரா!

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.  இந்த நிலையில் இன்றுடன் வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.  இந்த திரைப்படத்திற்கும் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

சின்னத்திரையில் மீண்டும் ஜொலிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விஜே மகேஸ்வரி..

ஆதி - நிக்கி கல்ராணி நடித்த மரகத நாணயம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.  அந்த திரைப்படத்தின் இயக்குனர் சரவணனின் படம் என்பதால், வீரன் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Musthak
First published:

Tags: Hip hop Tamizha, Kollywood