• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹிப் ஹாப் ஆதியின் ’சிவகுமாரின் சபதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹிப் ஹாப் ஆதியின் ’சிவகுமாரின் சபதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகுமாரின் சபதம்

சிவகுமாரின் சபதம்

ஹிப் ஹாப் ஆதி நடித்திருப்பதுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, இசையமைத்துள்ளார்.

  • Share this:
    ஹிப் ஹாப் ஆதி நடிப்பில், சத்யஜோதி தயாரித்து வந்த சிவகுமாரின் சபதம் படம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

    ஹிப் ஹாப் ஆதிக்கு நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர் நடிக்கும் படங்கள் 'ஏ' சென்டர்களில் ஓரளவு வசூலை பெறுகின்றன. சத்யஜோதி ஃபிலிம்ஸ் அவரது நடிப்பில் அன்பறிவு என்ற படத்தை தயாரித்து வந்த நிலையில், சிவகுமாரின் சபதம் என்ற படத்தையும் தொடங்கினர். இதில் ஹிப் ஹாப் ஆதி நடித்திருப்பதுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, இசையமைத்துள்ளார்.

    சிவகுமாரின் சபதம் படத்தின் ட்ரெய்லரை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை வைத்து வெளியிட்டார் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30 படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் படத்தில் மாதூரி ஜெயின் நாயகியாக நடித்துள்ளார். ஆதித்யா கதிர், ப்ரியங்கா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்கில் வெளியான தமிழ் படங்கள் எதுவும் ரசிகர்களை கவராத நிலையில், செப்டம்பர் 30 வெளியாகயிருக்கும் சிவகுமாரின் சபதம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: