Hip Hop Aadhi: நாளை 'சிவகுமார் பொண்டாட்டி' பாடலை வெளியிடும் ஹிப்ஹாப் ஆதி

சிவகுமாரின் சபதம்

ஹீரோவாக நடிப்பதுடன் படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி இயக்குவதுடன், இசையமைக்கவும் செய்கிறார் ஹிப்ஹாப் தமிழா.

  • Share this:
    'சிவகுமாரின் சபதம்’ படத்தில் இடம்பெற்றுள்ள, ’சிவகுமார் பொண்டாட்டி’ எனத் தொடங்கும் பாடலை நாளை (ஜுலை 2) வெளியிடுகிறார்கள்.

    சுந்தர் சி தான் ஹிப்ஹாப் தமிழா நடிக்கும், இயக்கும் படங்களை தயாரித்து வந்தார். எவ்வளவு நாள்தான் நம்ம கஸ்டடியிலேயே வைத்திருப்பது என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்திருப்பார் போல. சத்யஜோதி பிலிம்ஸ் அவரை கப்பென்று பிடித்துக் கொண்டு விட்டது. அவர்கள் தயாரிப்பில் ’சிவகுமாரின் சபதம்’ என்ற படத்தில் ஹிப்ஹாப் தமிழா நடிக்கிறார்.

    தொலைக்காட்சி நிறுவனங்கள் படம் தயாரித்தால், தொலைக்காட்சியில் இலவசமாக விளம்பரம் செய்யலாம், பணம் தராமலே சேட்டிலைட் உரிமையை வைத்துக் கொள்ளலாம் என பல வசதிகள் இருப்பது போலவே ஹிப்ஹாப் தமிழாவை ஹீரோவாக்குவதில் பல நன்மைகள். அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், இசையும் போட்டுக் கொள்வார். மினி மீல்ஸ் மாதிரி ஒரே செலவில் பல உணவுகளை சுவைக்கலாம். சிவகுமாரின் சபதமும் இந்த மினி மீல்ஸ் பேக்கேஜில் தயாராகிறது. அதாவது, ஹீரோவாக நடிப்பதுடன் படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி இயக்குவதுடன், இசையமைக்கவும் செய்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் படத்தின் முதல் சிங்கிளை நாளை (ஜுலை 2) வெளியிடுகின்றனர். சிவகுமார் பொண்டாட்டி எனத் தொடங்கும் பாடல் இது என விளம்பரப்படத்தியுள்ளனர். திங்க் மியூஸிக் சிவகுமாரின் சபதம் படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. விரைவில் படம் வெளிவர உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: