Home /News /entertainment /

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் அறிவிப்பு…

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் அறிவிப்பு…

வீரன் படக்குழு

வீரன் படக்குழு

மரகத நாணயத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்குகிறார். தீபக் மேனன் ஒளிப்பதிவும், பிரசன்னா எடிட்டிங் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்த ஹிப்ஹாப் ஆதி சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு முதல், மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

இவற்றில் மீசைய முறுக்கு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. மற்ற எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும் படியாக அமையாத நிலையில் ஆதி தொடர்ந்து படம் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க - தமிழ் சினிமாவின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!

கடைசியாக வெளிவந்த அன்பறிவு படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் ஆதியை வைத்து மீண்டும் புதிய படத்தை தயாரிக்கப் போவதாக சத்யஜோதி அறிவித்து இன்று பூஜை நடைபெற்றது.





புதிய படத்திற்கு வீரன் என்று பெயர் வைத்துள்ளார்கள். இன்றைக்கே முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. அந்த வார்த்தை சொன்ன தாமரை.. கடுப்பானாரா ஆங்கர் பிரியங்கா? கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!

இந்த படத்தை மரகத நாணயத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்குகிறார். தீபக் மேனன் ஒளிப்பதிவும், பிரசன்னா எடிட்டிங் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் வெளியாகவுள்ளது. அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் மெகாஹிட் படத்தின் மூலம் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Hip hop Tamizha

அடுத்த செய்தி