முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நகரும் வாகனத்தின் டாப்பில் நின்று பிரசாரம்.. படாரென பிரேக் போட்ட ட்ரைவர்.. தடுமாறி விழுந்த பாலகிருஷ்ணா!

நகரும் வாகனத்தின் டாப்பில் நின்று பிரசாரம்.. படாரென பிரேக் போட்ட ட்ரைவர்.. தடுமாறி விழுந்த பாலகிருஷ்ணா!

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

தொண்டர்கள், ரசிகர் ஆகியோரின் வாழ்த்துக்களை ஏற்று கொண்ட போது பிரச்சார வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார் நடிகர் பாலகிருஷ்ணா.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகரும், எம்.எல்.ஏவும் ஆன பாலகிருஷ்ணா தனது சொந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். என்.டி. ராமராவ் மகன் நடிகர் பாலகிருஷ்ணா தன்னுடைய சொந்த தொகுதியான இந்துபூரில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்கள், ரசிகர்கள் ஆகியோரை நோக்கி கைகளை அசைத்து அவர்களுடைய வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மெதுவாக சென்றுகொண்டிருந்த அவரது பிரச்சார வாகனத்தை டிரைவர் சற்று வேகம் பிடித்துள்ளார். இதனால் வாகனத்தின் மீது நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணா திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

உடனே பாலகிருஷ்ணா உடன் இருந்தவர்கள் எச்சரிக்கை அடைந்து  அவரை தாங்கிப்பிடித்து கொண்டனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாலகிருஷ்ணாவுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. சற்று நேர ஓய்வுக்க பின்னர் மீண்டும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார் நடிகர் பாலகிருஷ்ணா.

Also read... விஜய் படங்களால் பிரபல தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment