யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பதான்’திரைப்படம் வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல் ஒன்றில் காவி வண்ண பிகினி அணிந்திருப்பதாகவும் இது இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து பதான் படத்தைத் திரையிடும் குஜராத் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின. குஜராத் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன், இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்குமாறு குஜராத் அரசின் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தது. இதன் எதிரொலியாக குஜராத் அரசு தற்போது மாநிலத்தின் மல்டிபிளக்ஸ் சங்கத்திடம் அவர்களுக்கு தங்களின் முழு ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய உரையில், "நம்மில் சிலர் திரைப்படங்களைப் பற்றி தேவையற்ற கருத்துகளை வெளியிடுகிறார்கள். தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பல்வேறு மடங்களைச் சேர்ந்த துறவிகள் கலந்துகொண்ட தர்ம சபை கூடியது. இந்த கூட்டத்தில் இந்து சனாதன தர்மம் மற்றும் இந்து கலாச்சாரத்திற்கு எதிராக வெளியாகும் எந்த மொழி திரைப்படங்களையும் தொலைக்காட்சி மற்றும் இணையதள தொடர்களையும் அனுமதிக்கக்கூடாது, ஆபாச காட்சிகளையும் பெண்களுக்கு எதிரான காட்சிகளையும் ஏற்கக் கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக நாங்கள் அமைக்கும் 9 பேர் கொண்ட தணிக்கை குழுவினர் படங்கள், தொடர்களைப் பார்த்து ஒப்புதல் வழங்கிய பின்னரே பொதுமக்கள் பார்வைக்கு அனுப்பும் நடைமுறையை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்காக நீதிமன்ற செல்லவும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Censor Board, Shah rukh khan