ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மொழி பிரச்னையை தூண்டுவதாக நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியினர் புகார்!

மொழி பிரச்னையை தூண்டுவதாக நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியினர் புகார்!

சித்தார்த்

சித்தார்த்

நடிகர் சித்தார்த் கடந்த 27ம் தேதி, தனது பெற்றோருடன் விமான நிலையம் சென்றபோது அங்கு பாதுகாப்பு நின்றிருந்த மத்திய படை வீரர்கள் இந்தியில் பேசும்படி கூறியதாக அண்மையில் சமூக வலைதலத்தில் பதிவிட்டிருந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மொழி பிரச்னையை தூண்டுவதாக நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் அன்மையில் பதிவு செய்திருந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதில் மதுரை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபடும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் புகைப்படத்துடன்,"காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம்.

என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுக்க வைத்தனர். ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர்.மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினர்.

வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்துவிடும் நிலையில், அதன் ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளங்களில் வைரலானது.

Also read... Oh My Ghost Movie Review: சிரிப்பும் இல்லை... பயமும் இல்லை... சன்னி லியோனின் 'ஓ மை கோஸ்ட்’ பட விமர்சனம்!

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் புகார் அளித்துள்ளார். அதில் மொழி பிரச்னையை தூண்டும் வகையில் சித்தார்த் செயல்பட்டதாகவும்,அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதேபோல் சித்தார்த்தையும் அவரின் குடும்பத்தினரையும் 2 ஆண்டுகளுக்கு விமானப் பயணத் தடை விதிக்க வேண்டும் என்று பாஜக ஓபிசி பிரிவு செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி, மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையச்சர் வி.கே.சிங்கிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Siddharth