Home /News /entertainment /

கைதி படத்தின் இந்தி ரீமேக் தொடக்கம்!

கைதி படத்தின் இந்தி ரீமேக் தொடக்கம்!

கைதி கார்த்தி

கைதி கார்த்தி

கைதியை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், அஜய் தேவ்கானின் அஜய் தேவ்கான் ஃபிலிம்ஸுடன் இணைந்து இந்தி ரீமேக்கை தயாரிக்கிறது.

கைதி படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த ரீமேக்கில் அஜய் தேவ்கான் கார்த்தி நடித்த வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியாகும் படங்களை பெருமளவு இந்தியில் ரீமேக் செய்கின்றனர். விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் ஹிர்த்திக் ரோஷன், சயிப் அலிகான் நடித்து வரும் நிலையில் கைதி படத்தின் இந்தி ரீமேக் நேற்று தொடங்கியது. படத்துக்கு போலா என பெயர் வைத்துள்ளனர். இது பிறகு மாற்றப்படலாம்.

கைதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வெளியான படம். பாடல்கள், காதல், காமெடி என எதுவும் இல்லாமல் ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டது. முழுக்க ஆக்ஷன் அதிரடியில் தயாரான படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இதன் இந்தி டப்பிங் யூடியூபில் பல கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 2021 நவம்பர் 19 ஆம் தேதி கைதி ஜப்பானிலும் திரையிடப்பட்டது.

ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

Hindi remake of Kaithi movie begins, kaithi remake, kaithi movie, kaithi, kaithi story issue, karthi kaithi, kaithi hindi remake, kaithi full movie, கைதி ரீமேக், கைதி இரண்டாம் பாகம், கைதி ரீமேக், கைதி, கைதி கதை பிரச்சினை, கார்த்தி கைதி, கைதி இந்தி ரீமேக், கைதி முழு திரைப்படம்,

கைதியை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், அஜய் தேவ்கானின் அஜய் தேவ்கான் ஃபிலிம்ஸுடன் இணைந்து இந்தி ரீமேக்கை தயாரிக்கிறது. தர்மேந்திரா சர்மா படத்தை இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அப்படம் திரைக்கு வரவுள்ளது. இரண்டாவது படம் கைதியின் ரீமேக்கை நேற்று தொடங்கியுள்ளனர். மூன்றாவது படம் மாஸ்டரை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஒரு தமிழ்  இயக்குனரின் அனைத்துப் படங்களும் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதும் சாதனை தான்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Bollywood

அடுத்த செய்தி