இந்தி தான் நமது தேசியமொழி என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறியதற்கு, நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யா ஸ்பந்தனா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு, சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் வலுத்தன. இதற்கிடையே கே.ஜி.எஃப் படம் குறித்து பேசிய நடிகர் கிச்சா சுதீப், “கன்னடத்தில் பான் இந்திய படம் எடுக்கப்பட்டதாக சொன்னார்கள். நான் ஒரு சிறிய திருத்தம் செய்ய விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல” என்றார்.
அதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், "இந்தி தான் நமது தேசிய மொழி. உங்கள் கருத்துப்படி இந்தி மொழி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் கன்னட படங்களை டப் செய்து இந்தியில் ஏன் வெளியிடுகிறீர்கள்?” என இந்தியில் கேள்வி கேட்டு ட்வீட் செய்திருந்தார்.
அஜய் தேவ்கனின் அந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சுதீப், ”நீங்கள் இந்தியில் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது. நாம் அனைவரும் இந்தி மொழியை நேசித்து கற்றுக்கொள்வோம். குற்றமில்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா" எனக் கேட்டிருந்தார்.
KRK Review: காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கிறது?
இந்நிலையில் அஜய் தேவ்கனின் ட்வீட்டை கோட் செய்து, ”இல்லை - இந்தி நமது தேசிய மொழி அல்ல. அஜய் தேவ்கன். உங்கள் அறியாமை திகைப்பூட்டுகிறது. KGF, புஷ்பா மற்றும் RRR போன்ற படங்கள் இந்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கலைக்கு மொழி தடை இல்லை. உங்கள் படங்களை நாங்கள் ரசிப்பது போல் எங்கள் படங்களையும் ரசியுங்கள்” எனக் குறிப்பிட்டு, இந்தி திணிப்பை நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.