இந்தி நடிகை சசிகலா திடீர் மரணம்

சசிகலா ஜவால்கர்

பாலிவுட் மூத்த நடிகை சசிகலா மரணமடைந்தார். அவருக்கு வயது 88.

 • Share this:
  பாலிவுட்டில் 70-களில் வெளியான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சசிகலா ஜவால்கர். சோலாப்பூரில் 1932-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்த இவர் திரைத்துறையில் பல ஏற்ற இரக்கங்களை சந்தித்து நடிகையானார். இவரது தந்தை மிகப்பெரிய தொழிலதிபராக இருந்துள்ளார். சசிகலாவுடன் பிறந்தவர்கள் ஆறு பேர்.

  சிறு வயதில் நடனம், பாடல் பாடுவதில் திறமை வாய்ந்த சசிகலா மும்பையில் தயாரிப்பாளர் நூர் ஜஹானை சந்தித்து பின்னர் அவரது கணவர் சௌகத் ரிஜ்வி தயாரிப்பில் ஜீனத் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும் ஹம்ஜோலி, சர்ஹம், சோரி சோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

  திரைத்துறை மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் சசிகலா ஜவால்கர். 2007-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏப்ரல் 4-ம் தேதி மதியம் சசிகலாவின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  Published by:Sheik Hanifah
  First published: