ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நவரச நாயகன் கார்த்திக் படத்தில் இணைந்த சன்னி லியோன்… படப்பிடிப்பு துவக்கம்…!

நவரச நாயகன் கார்த்திக் படத்தில் இணைந்த சன்னி லியோன்… படப்பிடிப்பு துவக்கம்…!

கார்த்திக் - சன்னி லியோன்

கார்த்திக் - சன்னி லியோன்

தமிழ் சினிமாவில் கடந்த 2014-ல் வெளிவந்த வடகறி என்ற படத்திலும், வீரமாதேவி என்ற படத்திலும் சன்னி லியோன் நடித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நவரச நாயகன் கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ என்ற படத்தில் பிரபல இந்தி பட நாயகி சன்னி லியோன் இடம்பெற்றுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

  பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் சன்னி லியோன். இந்தி திரையுலகிற்கு வருவதற்கு முன்பாகவும் பல்வேறு ஆங்கில சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

  41 வயதாகும் சன்னி லியோன், 2012-ல் வெளியான ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம், இந்தி சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னரும் பல்வேறு இந்திய மொழிப் படங்களில் சன்னி லியோன் நடித்து வருகிறார்.

  விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வைரலாகும் அப்டேட்!

  தமிழ் சினிமாவில் கடந்த 2014-ல் வெளிவந்த வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இதன் பின்னர் வீரமா தேவி என்ற தமிழ் படத்திலும் சன்னி லியோன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

  2011-இல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், இந்தி வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார் சன்னிலியோன். இந்தநிலையில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ என்ற படத்தில் சன்னிலியோன் இடம்பெறுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  ''மேடம் வேண்டாம்.. லைலான்னு கூப்பிடுங்க'' - கலகலன்னு பேசிய மித்ரன்.. விழுந்து சிரித்த லைலா!

  இந்த படத்தை டி.எம். ஜெயமுருகன் இயக்குகிறார். மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் ‘தீ இவன்’ திரைப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்குடன் சுகன்யா, ராதாரவி, சுமன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

  நவரச நாயகன் கார்த்திக் கடைசியாக, 2019 -இல் வெளிவந்த கார்த்தியின் தேவ் படத்தில் நடித்திருந்தார். இதன்பின்னர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்திலும் கார்த்திக் முக்கிய கேரக்டரில் இடம்பெற்றுள்ளார். அந்தகன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Sunny Leone