Home /News /entertainment /

YearEnder 2021: 2021-ல் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்!

YearEnder 2021: 2021-ல் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்!

மாஸ்டர் - அண்ணாத்த

மாஸ்டர் - அண்ணாத்த

கொரோனாவால் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா புத்துயிர் பெற்று மீண்டும் பொலிவு பெறுவதற்கான விதை மாஸ்டர் போட்டது தான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்த 2021-ம் ஆண்டில் அதிகம் வசூலித்த டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    கடந்த வருடம் கொரோனா தொற்று இந்தியாவுக்கு பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்ததையடுத்து, திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, சூர்யாவின் ‘சூரறைப்போற்று’, கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ உள்ளிட்டப் படங்கள் ஓடிடி-யில் வெளியாகின.

    இதையடுத்து கடந்த வருட இறுதியில் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டாலும், கொரோனா அச்சத்தால் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு செல்வதை தவிர்த்தனர். இந்நிலையில் இந்த வருட தொடக்கத்தில், அதாவது 2021 பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

    அதுவரை பயந்து கிடந்த தமிழ் சினிமா ரசிகர்களை திரையரங்கு நோக்கி படையெடுக்க வைத்தது மாஸ்டர். கொரோனாவால் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா புத்துயிர் பெற்று மீண்டும் பொலிவு பெறுவதற்கான விதை மாஸ்டர் போட்டது தான். இது விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையை அளித்தது.

    இதையும் படிங்க - பில்டப் அளவுக்கு படம் இல்லையே - புஷ்பா ரசிகர்கள் ஏமாற்றம்

    இதையடுத்து தனுஷின் கர்ணன், கார்த்தியின் சுல்தான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இந்நிலையில் 2021-ம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த படங்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்யின் மாஸ்டர்- ரூ.250 கோடி வசூலித்து முதலிடத்திலும், ரஜினிகாந்தின் அண்ணாத்த- ரூ.150 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், சிவகார்த்திகேயனின் டாக்டர்- ரூ.100 கோடி வசூலித்து மூன்றாம் இடத்திலும் உள்ளன. சிம்புவின் மாநாடு- ரூ.85 கோடியுடன் நான்காம் இடத்தையும், தனுஷின் கர்ணன்- ரூ.70 கோடி வசூலித்து ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Dhanush, Rajinikanth, Simbu, Sivakarthikeyan, YearEnder 2021

    அடுத்த செய்தி