நேர்கொண்ட பார்வை படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்... பார்வையாளர்களிடம் பணம் திரும்ப ஒப்படைப்பு

நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிநாட்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

Web Desk | news18
Updated: August 12, 2019, 8:49 AM IST
நேர்கொண்ட பார்வை படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்... பார்வையாளர்களிடம் பணம் திரும்ப ஒப்படைப்பு
நேர்கொண்ட பார்வை
Web Desk | news18
Updated: August 12, 2019, 8:49 AM IST
நேர்கொண்ட பார்வை படத்துக்கு வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் பார்வையாளர்களுக்கு திரும்பி வழங்கப்பட்டது.

அஜித் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சென்னையில் மட்டும் இப்படம் முதல் 3 நாட்களில் 4 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் வெளிநாட்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
Loading...இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு வந்த புகாரை அடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் திரையிடப்பட்டிருந்த 6 திரையரங்குகளில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பார்வையாளர்களிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.34,000-த்தை வருவாய்த்துறை அதிகாரிகள் திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்று பார்வையாளர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Also

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...