நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! உயர் நீதிமன்றம் அதிரடி

இந்த வழக்கை கடந்த 2017-ம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, கட்டிடப்பணிகளை மேற்கொள்ள தடைவிதித்து இருந்தது.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! உயர் நீதிமன்றம் அதிரடி
சென்னை உயர்நீதிமன்றம்
  • News18
  • Last Updated: August 28, 2019, 5:43 PM IST
  • Share this:
சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னை தி.நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு 26 கோடி ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதால் அந்த முடிவை ரத்து செய்யக்கோரி தி.தகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை கடந்த 2017-ம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, கட்டிடப்பணிகளை மேற்கொள்ள தடைவிதித்து இருந்தது.

பின்னர் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என தெரிவித்ததால், கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் சாலையை ஆக்கிரமித்து நடிகர்சங்கம் கட்டிடம் கட்டப்படவில்லை என உறுதியானதால் இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also see...

Loading...

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...