நடிகர் சங்க தேர்தல் முடிவுளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

நடிகர் சங்கத்தில் தற்போது நடைபெற்ற தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி துணை நடிகர்கள் பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

news18
Updated: August 8, 2019, 9:22 PM IST
நடிகர் சங்க தேர்தல் முடிவுளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!
சென்னை உயர்நீதிமன்றம்
news18
Updated: August 8, 2019, 9:22 PM IST
நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடிகர் சங்க நிர்வாகிகள் , பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இந்த தேர்தலை நடத்தியது செல்லாது என அறிவிக்க கோரி துணை நடிகர்கள் பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதில், நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டதாகவும், இதுவரை அதற்காக 30 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தபால் வாக்குகள் 7 நாட்களுக்கு முன்னரே அனுப்பி வைக்கப்பட்டதாகவும், 90 சதவித வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும், இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் மனுதாரர் பெஞ்சமனுக்கு தாமதமாக தபால் வாக்கு சென்றது எதிர்பாராதது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் ஏப்ரல் 18-ம் தேதி முடிவடைந்தது. ஆனால், நிர்வாகிகள் படப்பிடிப்பிற்காக வெளியூர்களில் இருந்ததால் 10 நாட்கள் காலதாமதமாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதாகவும், முறையாக விதிகளை பின்பற்றி தான் தேர்தல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

Loading...

மேலும், நடிகர் சங்க நிர்வாகிகள் இல்லாத காரணத்தினால் பல நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்ய முடியவில்லை என்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால் அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நடிகர் சங்க தேர்தல் முடிவுளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த நீதிபதி வழக்கு விசாரணையை மீண்டும் ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Also see...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...