திரைப்பட இயக்குனர் சுசிகணேசன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை வேறு மாஜிஸ்திரேட்டுக்கு மாற்றக் கோரி, கவிஞர் லீனா மணிமேகலை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கவிஞர் லீனா மணிமேகலை, திரைப்பட இயக்குனர் சுசிகணேசன் மீது ட்விட்டர் வலைதளத்தில் 'மீ டு' புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
எந்த ஒரு அடிப்படை ஆதாரமின்றி, சுய விளம்பரத்துக்காக பொய்யான புகாரை பதிவிட்டுள்ள லீனா மணிமேகலையை, இந்திய தண்டனை சட்டம் அவதூறு பிரிவின்கீழ் அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை சைதாப்பேட்டை ஒன்பதாவது மாஜிஸ்திரேட் மோகனாம்பாள் விசாரிக்க கூடாது என்றும், வேறு மாஜிஸ்திரேட் வழக்கை விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்றும் லீனா மணிமேகலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, இயக்குனர் சுசிகணேசன் சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணையை இழுத்தடித்து. வருவதாகவும், வழக்கை மேலும் தாமதப்படுத்தவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றம் அவதூறு வழக்கை நான் குமாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று கெடு விதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
Also read... உபியில் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு!
மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, லீனா மணிமேகலை, மாஜிஸ்திரேட்டுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வழக்கை மாற்றவேண்டும் என்று கூறியுள்ளதாகவும், அதை ஏற்க முடியாது என்றும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.