Home /News /entertainment /

'ஹே! சினாமிகா' காஜல், அதிதி போஸ்டர்கள் வெளியீடு

'ஹே! சினாமிகா' காஜல், அதிதி போஸ்டர்கள் வெளியீடு

ஹே சினாமிகா

ஹே சினாமிகா

Hey Sinamika Movie : பிருந்தா இயக்கியிருக்கும் ஹே! சினாமிகா படத்தின் இரு புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நடன இயக்குனர் பிருந்தா முதல்முறையாக ஆக்ஷன் கட் சொல்லியிருக்கும் படம் ஹே! சினாமிகா. துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் இதில் நடித்துள்ளனர். நேற்று முன்தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்தப் போஸ்டரில் துல்கர் சல்மான் மட்டும் இடம்பெற்றிருந்தார். நேற்று அதிதி ராவ், காஜல் அகர்வால் இருக்கும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

அதிதி ராவ் இடம் பெற்ற போஸ்டரை நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் வெளியிட்டனர். காஜல் அகர்வால் இடம் பெற்ற புகைப்படத்தை நடிகர் ஆர்யாவும் அவரது மனைவி சாயிஷாவும் வெளியிட்டனர். ஹே! சினாமிகாவில் துல்கர் சல்மான் யாழன் என்ற விஜேவாக வருகிறார். அதிதி மௌனா என்ற கதாபாத்திரத்திலும், காஜல் அகர்வால் மலர்விழி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.



also read : இவ்ளோ அழகா! ரசிக்க வைக்கும் நடிகை பாவனா..

துல்கர் சல்மானும், அதிதி ராவும் திருமணம் முடித்த தம்பதிகளாக வருகின்றனர்.இவர்கள் தவிர கே.பாக்யராஜ், சுஹாசினி, குஷ்பு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளர்.



 

கார்க்கி படத்தின் திரைக்கதையை எழுத கோவிந்த் வசந்தா படத்துக்கு இசையமைத்துள்ளார். ப்ரீத்தா ஜெயராமன் படத்தில் நடனத்தை அமைத்துள்ளார். படத்தின் பாடல்களையும் கார்க்கி எழுதியுள்ளார்.2022 பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி ஹே! சினாமிகா திரைக்கு வருகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actress Aditi Rao Hydari, Actress Kajal Agarwal

அடுத்த செய்தி