Home /News /entertainment /

தெலுங்கு ஓடிடியில் வெளியாகும் நிவின் பாலி, த்ரிஷா படம்...!

தெலுங்கு ஓடிடியில் வெளியாகும் நிவின் பாலி, த்ரிஷா படம்...!

ஹேய் ஜுட்

ஹேய் ஜுட்

தமிழ், தெலுங்கில் அதிக படங்கள் நடித்து வந்த த்ரிஷா மலையாளத்தில் மட்டும் நடிக்காமலிருந்தார். இறுதியில் 2018 இல் மலையாளத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஷியாமபிரசாத்தின் ஹேய் ஜுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நிவின் பாலி நாயகன்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
நிவின் பாலி, த்ரிஷா நடித்த ஹேய் ஜுட் திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கில் அதிக படங்கள் நடித்து வந்த த்ரிஷா மலையாளத்தில் மட்டும் நடிக்காமலிருந்தார். இறுதியில் 2018 இல் மலையாளத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஷியாமபிரசாத்தின் ஹேய் ஜுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நிவின் பாலி நாயகன்.

ஷியாமபிரசாத் கலாபூர்வமான திரைப்படங்கள் எடுப்பதில் பெயர் போனவர். ஆனால், ஹேய் ஜுட் திரைப்படத்தை மிக எளிமையாக நகைச்சுவை ததும்ப எடுத்திருந்தார். சித்திக், அஜு வர்க்கீஸ், நீனா குருப் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவாவில் எடுக்கப்பட்டன. மலையாளத்தில் படம் பரவலான வரவேற்புடன் ஓடியது.

இந்தப் படத்தை அதே பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்துள்ளனர். இந்தப் படம் தெலுங்கின் முன்னணி ஓடிடி தளமான ஆஹாவில் ஜனவரி 21 ஆம் தேதி வெளியாவதாக அறிவித்துள்ளனர். மலையாளத்தின் கலாபூர்வமான திரைப்படங்களுக்கு தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அதனை மனதில் வைத்து ஹேய் ஜுட் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர்.

Also read... இந்தி திரையுலகை ஆக்கிரமிக்கும் தென்னிந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை!

த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாக வேண்டிய தெலுங்குப் படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் ஹேய் ஜுட் படத்தின் தெலுங்குப் பதிப்பு வெளியாவது அவரைப் பொறுத்தவரையில் நல்ல விஷயம்.

இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் பல மலையாளப் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Trisha, Nivin Pauly

அடுத்த செய்தி