முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆர்யாவுடன் இணைந்து நடிக்கத் தயார்… கதாநாயகன் சந்தானம் உறுதி

ஆர்யாவுடன் இணைந்து நடிக்கத் தயார்… கதாநாயகன் சந்தானம் உறுதி

கேப்டன் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் ஆர்யா, சந்தானம், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கலைப்புலி தாணு  உள்ளிட்டோர்

கேப்டன் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் ஆர்யா, சந்தானம், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கலைப்புலி தாணு உள்ளிட்டோர்

Captain Movie : பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் அவருக்கு நிகரான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அனுமதித்தார் – சந்தானம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்யா திரைப்படத்தில் இணைந்து நடிப்பேன் என நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்த வருகிறார். இவர் நடிகர் ஆர்யாவின் கேப்டன் திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் பேசிய நடிகர் சந்தானம், நான் நாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு இரண்டு ஹீரோ கதைகள் மற்றும் கெஸ்ட் ரோலில் நடிக்க பலரும் கேட்டனர்.  ஆனால் அதை எல்லாம் மறுத்துவிட்டு ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறேன்.

‘கேப்டன் ஷூட்டிங்கின்போது 2 முறை கொலை செய்யப் பார்த்தார்’ – இயக்குனரை கலாய்த்த நடிகர் ஆர்யா

ஆனால் நடிகர் ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும், நான் அவருடன் இணைந்து நடிப்பேன்.

பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் அவருக்கு நிகரான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அனுமதித்தார் என தெரிவித்தார்.  ஆர்யாவின் படமாக இருந்தாலும் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அங்கு தன்னுடைய பங்கு இருக்கும் எனவும் சந்தானம் கூறினார்.

‘நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை’ – நம்பி ஏமாற வேண்டாம்…

மேலும் திரைப்படங்களில் ஏதாவது சின்ன புது விஷயமாவது இருக்க வேண்டும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள். அந்த வகையிலான படமாக கேப்டன் இருக்கும் என சந்தானம் நம்பிக்கை தெரிவித்தார்.

First published:

Tags: Actor Arya, Actor Santhanam