நான் சக்திமான் மாதிரி ஆகணும் மிஸ்... சிவகார்த்திகேயனின் 'ஹீரோ’ ட்ரெய்லர்

  • Share this:
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ஹீரோ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ஹீரோ. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜுன், இவானா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.


அதில் கல்விக்கு பின்னால் இருக்கும் அரசியலும் பேசப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஹீரோ திரைப்படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்