நீண்ட இடைவேளைக்கு பிறக்கு வடிவேலு ஹீரோவாக நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகயுள்ளது.
தலைநகரம், மருதமலை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. மேலும் சரியான வெளியீட்டு தேதிக்காக தயாரிப்பு நிறுவனம் காத்திருந்தது.
இந்த நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வந்தன. அதை தற்போது தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.
Also read... பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்க்விட் கேம் சீரிஸ் நடிகர்!
நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வடிவேலுவுடன் பல நகைச்சுவை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அந்த திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார். அதில் இடம்பெறும் அப்பத்தா பாடலை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
Dropping the 2nd single 🎼 #Panakkaran 🤑 from #NaaiSekarReturns 🐶💯 today at 6PM!
Composed & sung by @Music_Santhosh 🎹🎤
Lyrics by @Lyricist_Vivek 🖋️
Vaigai Puyal #Vadivelu 🌪️ @Director_Suraaj 🎬 @thinkmusicindia 💿 @gkmtamilkumaran 🤝 @LycaProductions #Subaskaran 🪙 pic.twitter.com/kpvsmk1VrD
— Lyca Productions (@LycaProductions) November 26, 2022
இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. பணக்காரன் என்ற இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளரும், பாடகருமான சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். முன்னதாக வெளியான அப்பத்தா பாடல் பெறும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடல் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vadivelu