ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிக்க ப்ளான் போடும் பரத் - வெளியானது ‘லவ்’ பட டீசர்!

WATCH: மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிக்க ப்ளான் போடும் பரத் - வெளியானது ‘லவ்’ பட டீசர்!

லவ்

லவ்

Love - Official Teaser | காதலித்து திருமணம் செய்த தன் மனைவியை ஏதோ ஒரு பிரச்சினையில் கொலை செய்து விடுகிறார் பரத். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்ன செய்கிறார் என்பது இந்த படத்தின் கதையாக தெரிகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மலையாளத்தில் வெளியாகி வெற்றி அடைந்த 'லவ்' என்ற திரைப்படத்தை தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்து நடித்துள்ளார் பரத்.  இந்த திரைப்படத்திலும் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மலையாளத்தில் புலி முருகன், லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றிய ஆர்.பி பாலா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  மலையாளத்தில் 2020ஆம் ஆண்டு இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் ரஜிஷா விஜயன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் சக்கைபோடு போட்டது. காதலித்து திருமணம் செய்த தன் மனைவியை ஏதோ ஒரு பிரச்சினையில் கொலை செய்து விடுகிறார் பரத். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்ன செய்கிறார் என்பது இந்த படத்தின் கதையாக தெரிகிறது.

' isDesktop="true" id="851850" youtubeid="U4rFIXmV2Ew" category="cinema">

நன்றி: Think Music India.

First published:

Tags: Tamil Movies Teaser