முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'வீரமே வாகை சூடும்' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

'வீரமே வாகை சூடும்' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

veerame vaagai soodum

veerame vaagai soodum

'வீரமே வாகை சூடும்' திரைப்படமும் முந்தைய படங்களின் அதே ஆக்ஷன் ஜானரில் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் திரையரங்குகளில் கூட்டம் இல்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் வார இறுதி வசூல் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளனர். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ஆக்சன், சக்ரா, அயோக்கியா, எனிமி என எந்தத் திரைப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. தயாரிப்பாளர்களுக்கு கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில் 'வீரமே வாகை சூடும்' திரைப்படமும் முந்தைய படங்களின் அதே ஆக்ஷன் ஜானரில் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் திரையரங்குகளில் கூட்டம் இல்லை. தமிழகத்தைப் போலவே தெலுங்கு, கன்னட மாநிலங்களிலும் படத்திற்கு கூட்டம் இல்லை. ஆந்திரா, தெலுங்கானாவில் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது..

தமிழகத்திலும் பார்வையாளர்கள் இருபதுக்கும் குறைவாகவே பல திரையரங்குகளில் இருந்தனர். பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மூன்று மொழிகளிலும் சேர்த்து வார இறுதியில் சுமார் ஆறு கோடிகள் படம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது வரிகள் போக நெட் கலெக்ஷன் எனவும் ட்ரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் திரையரங்குகள், விநியோகிஸ்தர்கள் ஷேர் போக படத்தை வாங்கி விநியோகித்தவருக்கு கிடைக்கக்கூடியது சொற்பமே. வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் தமிழக திரையரங்கு உரிமை சுமார் பத்தரை கோடிகளுக்கு விற்கப்பட்டதாக கூறப்பட்டது. மூன்று மொழிகளிலும் சேர்த்து ஆறு கோடிகள் வசூலிக்கும் திரைப்படம் நிச்சயம் தமிழகத்தில் பத்து கோடியை அந்த விநியோகஸ்தருக்கு வசூலித்துத் தருவதற்கான வாய்ப்பே இல்லை.

Also Read : கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!

இதனால் படத்தை வாங்கியவர் பல கோடிகள் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீரமே வாகை சூடும் படத்தை விஷால் தயாரித்துள்ளதால் அவரது அடுத்தப் படத்தின் போது இவர்கள் போர்க்கொடி உயர்த்த வாய்ப்புள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor vishal, Box office, Entertainment