• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Amazon Prime, Hotstar, Netflix - ல் நடிகர் தனுஷின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் பட்டியல்

Amazon Prime, Hotstar, Netflix - ல் நடிகர் தனுஷின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் பட்டியல்

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை தந்திருந்தாலும், புஜ்ஜி பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  • Share this:
அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னிப் + ஹாட்ஸ்டார் மற்றும் பல OTT தளங்களில் தனுஷின் பல திரைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆக்‌ஷன், த்ரில்லர், க்ரைம், நகைச்சுவை என அவரின் அனைத்து திரைப்படங்களும் திரையரங்கு தவிர OTT தளங்களிலும் பார்க்கமுடியும். அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இடம்பெற்றுள்ள தனுஷின் திரைப்படங்கள் குறித்து விரிவாக காணப்போம்.

1. ஜகமே தந்திரம் : நெட்பிளிக்ஸ் (Netflix)

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை தந்திருந்தாலும், இப்படத்தின் ஆல்பம் பாடல்களில் இடம்பெற்றிருந்த புஜ்ஜி பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. கர்ணன் : அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime)

கர்ணன் என பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ் தனது சமீபத்திய படமான அசுரனை போன்று வேறொரு பாணியில் ஒரு தலைசிறந்த படைப்பை வழங்கினார். அதில் நடிகர் ஒரு இளைஞனாக நடிக்கிறார், அவருடைய சிந்தனை தனது கிராமத்தில் உள்ள பெரியவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது. பழைய தலைமுறை சமூகத்தில் தங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டாலும், கர்ணன் அதற்கு கேள்வி எழுப்புகிறார். ஏன் அவர்களின் கிராமத்தில் பஸ் நிறுத்தம் இல்லை? என கேட்கிறார். விஷயங்கள் சற்று மோசமாக மாறும்போது, ​​அநியாயமாக வழிநடத்தப்பட்ட கிராமத்திற்கு நீதியைக் கொண்டுவர அதே கோபத்தை கர்ணன் பயன்படுத்துகிறார்.3. ராஞ்சனா : அமேசான் பிரைம் வீடியோ

ஓய் திஸ் கோலவேரி டி என்ற பாடலை பாடிய பிறகு புகழின் உச்சத்தை தொட்ட பிறகு தான் தனுஷுக்கு பாலிவுட் திரையுலகில் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அங்கு மட்டுமல்ல நிறைய ஹால்லுவூட் திரைப்படங்களிலும் இவர் களமிறங்கியுள்ளார். உலகளவில் தனுஷ் புகழ் பெற்ற பிறகு அவருக்கு ராஞ்சனா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட்டில் அறிமுகமான தனஷ், சோனம் கபூருடன் ஜோடியாக நடித்தார். குண்டன் (தனுஷ்) சோயா (சோனம் கபூர்) என்ற முஸ்லிம் பெண்ணை காதலிக்கிறார். ஆனால் சோயா தனது கல்லூரியில் மாணவர் தலைவரான ஜஸ்ஜீத்தை காதலிக்கிறார். இறுதியில் இந்த முக்கோண காதலில் என்ன நடந்தது என்பது தான் கதை.4. தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபக்கீர்: அமேசான் பிரைம் வீடியோ

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பலவற்றில் அதிகம் அறியப்படாத தனுஷ் திரைப்படங்களில் ஒன்று, தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கீர் என்பது ஒரு அட்வென்ச்சர் நகைச்சுவை திரைப்படமாகும். இந்த படத்தில், தனுஷ் அஜாதசாத்ரு என்ற ஃபக்கீராக நடிக்கிறார். அவர் தனது வாழ்க்கைக்காக மக்களை ஏமாற்றி தனது தந்தையைத் தேடி பாரிஸுக்கு பறந்து செல்கிறார். ஆனால், பாரிஸை அடைந்ததும், அஜதாஷாத்ரு மேரியை காதலிக்கிறான், அவன் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.5. வட சென்னை - அமேசான் பிரைம் வீடியோ

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணி என்றாலே அது ப்ளாக்பஸ்டர் ஹிட் தான் என்பதில் சந்தேகமே இல்லை. வட சென்னை இதற்கு மற்றொரு புகழ்பெற்ற எடுத்துக்காட்டு. உங்களை கவர்ந்திழுக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர், வட சென்னை தனுஷ் ஒரு அபாயகரமான குற்ற உலகில் காலடி எடுத்து வைக்கும் கதை, அவர் ஒரு உள்ளூர் குண்டர்களுடன் சேர்ந்து சண்டைகளைத் தீர்ப்பதற்கு உதவுகிறார். இருப்பினும், விஷயங்கள் மோசமானவையாக மாறும் போது, கதைக்களம் சூடு பிடிக்கிறது. அதன் திரைக்கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.Also read... Ajith Kumar: அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளத்தில் இடம்பெற்றுள்ள தல அஜித்தின் மெகா ஹிட் படங்கள்!

6. அசுரன்: டிஸ்னி + ஹாட்ஸ்டார் (DIsney+ Hoststar)

தனுஷ் தனது சமீபத்திய வெளியீடுகளில் ஒன்றான அசுரனில் நடித்ததற்காக 2021 ஆம் ஆண்டில் தேசிய விருதைப் பெற்றார். 1980 களில் அமைக்கப்பட்ட இந்த தமிழ் அதிரடி-நாடகத் திரைப்படம் ஒரு நலிந்த பின்னணியில் இருந்து ஒரு விவசாயிக்கும் பணக்கார, உயர் சாதி நில உரிமையாளருக்கும் இடையிலான வர்க்கப் பிளவுகளை விவரிக்கிறது. இது ஒரு கொடூரமான கொலைக்கு வழிவகுக்கிறது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: