ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன் - விக்கி தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறந்த மருத்துவமனை சுகாதாரத்துறையால் கண்டுபிடிப்பு!

நயன் - விக்கி தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறந்த மருத்துவமனை சுகாதாரத்துறையால் கண்டுபிடிப்பு!

அமைச்சர் மா.சுப்பிரமணியம்

அமைச்சர் மா.சுப்பிரமணியம்

வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறந்த மருத்துவமனை சுகாதாரத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

இந்நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.

இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நடிகை நயன்தாரா, விக்னேஷ் எந்த மருத்துவமனையை அணுகி இரட்டை குழந்தை பிறந்தது என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது.

Also read... வலிமை நாயகி.. பாலிவுட் படத்தில் சிம்பு.. வெளியானது பாடல்!

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. யார் யார் தவறு செய்துள்ளார்கள். இதில் சட்டம் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பதை கண்டறிந்து, ஒரு வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், வாடகைத் தாய் விவகாரத்தில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மா.சுபரமணியன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Nayanthara