ஹோம் /நியூஸ் /entertainment /

படம் தயாரித்து காசே இல்லாமல் தெருவில் நின்றோம் - நேர்காணலில் கண் கலங்கிய அமீர்கான்!

படம் தயாரித்து காசே இல்லாமல் தெருவில் நின்றோம் - நேர்காணலில் கண் கலங்கிய அமீர்கான்!

ஆமிர் கான்

ஆமிர் கான்

அந்தப் படம் முடிய எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. அந்த சமயத்தில் எங்கள் குடும்ப நிலை மோசமானது. சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டோம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India

அமீர் கான் இந்தி சினிமாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். அவரது புத்திசாலித்தனமான படத் தேர்வுகள் மற்றும் துடிப்பான நடிப்பால் தனது ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்துள்ளார்.

அமீர்கான் சமீபத்தில் நடித்த 'லால்சிங் சத்தா' படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து சினிமாவை விட்டு விலகி இருக்கப்போவதாக அறிவித்தார். சில  நாட்களாக நேர்காணல் எதிலும் பங்கேற்காத  அமீர்கான் சமீபத்தில் ஒரு நேர்காணலில், அவர் தனது தந்தையும் தயாரிப்பாளருமான தாஹிர் உசேன் எதிர்கொண்ட நிதி நெருக்கடிகளை நினைவு கூர்ந்தார்.

''அந்த நாட்கள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனது தந்தை தாகிர் உசேன் 'ஸ ராக்கெட்' என்ற படத்தை தயாரித்தார். அதில் ஹீரோ, ஹீரோயின் ஆக ஜிதேந்திரா நடிகை ரேகா மற்றும் காதர் கான் போன்ற பெரும் நடிகர்களை ஒப்பந்தம் செய்தார். என் தந்தை பிரபல தயாரிப்பாளர் இல்லை என்பதால் அவர்கள் சரியாக கால்ஷீட் கொடுக்காமல் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது.

இதையும் பாருங்க: WATCH – விஜய் ஆன்டனி நடிக்கும் ‘ரத்தம்’ படத்தின் டீசர்

அந்தப் படம் முடிய எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. அந்த சமயத்தில் எங்கள் குடும்ப நிலை மோசமானது. சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டோம். வீட்டை விட்டு தெருவிற்கு வந்து விட்டோம். படம் எடுக்க கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர். அவர்களிடம் என் அப்பா கெஞ்சுவார். அப்போது நான் பத்து வயது சிறுவன். அதனால்தான் நடிக்க வந்த பிறகு தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் இருக்கிறேன்" என்றார்.

அமீர்கான் தான் வளரும்போது தனது குடும்பம் சந்தித்த சவால்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பேக்கு அளித்த பேட்டியில்,கான் தனது தந்தை தாஹிர் ஹுசைன் தயாரித்த படங்கள் தோல்வியடைந்தன. இதனால் நஷ்டம் ஏற்பட நிதி நெருக்கடிகளில் சிக்கித்தவித்துள்ளன. சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் க்ளிக் ஆனபோதும் அதிக பணம் ஈட்டவில்லை என்று அமீர் கூறினார்.

அமீர் கான் கடைசியாக லால் சிங் சட்டாவில் நடித்தார், இது வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அமைத்துள்ளது. நகைச்சுவை நாடகம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

First published:

Tags: Aamir Khan