நான் மட்டும் தான் குடிச்சேன்... பீட்டர் குடிக்கல - வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட வனிதா விஜயகுமார்

பீட்டர் பாலின் முதல் மனைவி அவரை குடிகாரர் என்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதை மறுத்து நடிகை வனிதா விஜயகுமார் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நான் மட்டும் தான் குடிச்சேன்... பீட்டர் குடிக்கல - வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட வனிதா விஜயகுமார்
புகைப்படம் (யூடியூப்) வனிதா விஜயகுமார்
  • Share this:
தமிழ் சினிமாவில், விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, அதன் பின், பல படங்களில் நடித்தாலும், முன்னணி நடிகையாக வலம்வர முடியாமல் போனது.

இரண்டு முறை திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார். விஜயகுமாருடன் சொத்து பிரச்னை ஏற்பட்டு ஆணையர் அலுவலகம் வரை புகார் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி முழுவதும் சர்ச்சை நாயகியாவே வலம் வந்தார். தற்போது, யூடியூப் சேனல் ஒன்றில் சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வரும் இவர், தனக்கு உதவியாக இருந்த சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா கிராபிக்ஸ் டிசைனர் பீட்டர் பாலை கடந்த 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபத் ஹெலன், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ளார். ஆனால் இருவருக்கும் தற்போது வரை விவாகரத்து ஆகாத நிலையில், வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இணைய ஊடகத்தில் பேட்டியளித்திருந்த எலிசபெத் ஹெலன், தன்னுடைய கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், குடிப்பழக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதை முற்றிலுமாக மறுத்த வனிதா விஜயகுமார் பீட்டர்பால் குடிகாரர் அல்ல. அசைவ உணவு கூட சாப்பிடமாட்டார். டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர். எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன். அவர் ஆல்கஹால் இல்லாத வைன் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்று கூறி அதற்கான வீடியோ ஆதாரத்தையும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

திருமணம் முடிந்த கையோடு வனிதா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிடும் வீடியோக்கள் அதிக பார்வைகளைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading