Home /News /entertainment /

நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30,23,609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் வணிக வரித்துறை உத்தரவிட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.

  • News18
  • Last Updated :
    வெளிநாட்டிலிருந்துஇறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.

    கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து நடிகர் விஜய் இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக வணிக வரித்துறை உத்தரவிட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் 7,98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.

    வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30,23,609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் வணிக வரித்துறை உத்தரவிட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.

    Also read... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு - சென்னை உயர் நீதிமன்றம்

    மேலும் இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுக்களும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவோடு சேர்த்து நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது.

    நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் ஆனால் 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

    வணிக வரித்துறையின் பதில் மனுவில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vijay, Madras High court

    அடுத்த செய்தி