• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாஸ்போர்ட்டை முடக்கிய உத்தரவை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கு - மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க உத்தரவு!

பாஸ்போர்ட்டை முடக்கிய உத்தரவை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கு - மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க உத்தரவு!

கவிஞர் லீனா மணிமேகலை

கவிஞர் லீனா மணிமேகலை

இயக்குனர் சுசி கணேஷன் தொடர்ந்த வழக்கின் பேரில் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாஸ்போர்ட்டை முடக்கிய உத்தரவை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை தாக்கல் செய்த மனுவுக்கு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் சுசி கணேஷன் மீது பாலியல் புகார் கூறிய கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக, இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், லீனா மணி மேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கி செப்டம்பர் 9ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

Also read... வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை - சீமானை கிண்டல் செய்த சூர்யா படம்...!

இந்த உத்தரவை எதிர்த்து லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஆராய்ச்சி பணிக்காக கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் செல்ல உள்ளதால் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மண்டல பாஸ்போர்ட் அலுவலர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்ததவிட்டார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: