முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் யோகிபாபு நடித்த ’இரும்பன்’ திரைப்படத்திற்கு தடை? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

நடிகர் யோகிபாபு நடித்த ’இரும்பன்’ திரைப்படத்திற்கு தடை? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இரும்பன்

இரும்பன்

சென்னை கே.கே. நகரில் உள்ள லெமுரியா மூவீஸ் தயாரிப்பில் ஜூனியர் எம்.ஜி.ஆர், யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில், இரும்பன் என்கிற படத்தை கீரா என்பவர் இயக்கியுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் யோகிபாபு நடித்துள்ள இரும்பன் திரைப்பட இயக்குனரின் சம்பள நிலுவை தொகையை மூன்று நாட்களில் நீதிமன்றத்தில் செலுத்தாவிட்டால், படத்திற்கு தடை விதிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே. நகரில் உள்ள லெமுரியா மூவீஸ் தயாரிப்பில் ஜூனியர் எம்.ஜி.ஆர், யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில், இரும்பன் என்கிற படத்தை கீரா என்பவர் இயக்கியுள்ளார்.

இரும்பன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் கீரா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கதை, திரைக்கதை, வசனம் போன்ற பணிகளுக்காக 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறி கடந்த 2020ம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாகவும், தற்போது வரை தனக்கு 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், ஆரம்ப தயாரிப்பு பணிகளுக்காக 10 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வழங்க வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்காமல் திரையரங்கு, டிஜிட்டல், ஓடிடி போன்ற எந்த தளத்திலும் வெளியிட தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை 17வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜி.புவனேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. இயக்குனருக்கு செலுத்த வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மூன்று நாட்களுக்குள் வழக்கின் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும், தவறினால் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Yogibabu