முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'A' சான்றிதழ் திரைப்படங்கள்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

'A' சான்றிதழ் திரைப்படங்கள்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

பல திரையரங்குகளில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதற்கான ‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை காண சிறுவர்களையும் அனுமதிப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரஷ்ணேவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திரைத்துறையில் தயாரிக்கப்படும் படங்களை பொதுமக்கள் பார்வைக்கு திரையிடப்படுவதற்கு முன்பு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும், அனைத்து வயதினரும் கண்டுகளிக்க கூடிய படங்களுக்கு யு சான்றும், வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படங்களுக்கு ஏ சான்றும், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின்படி காணக்கூடிய படங்களுக்கு யு/ஏ சான்றும், வரையறுக்கப்பட்ட பார்வையாளர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படங்களுக்கு எஸ் சான்றும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பல திரையரங்குகளில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதற்கான ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை காண சிறுவர்களையும் அனுமதிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கக் கூடாது என  திரையரங்கங்களுக்கு  மத்திய திரைப்பட வாரியம் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதை மீறி அனுமதிப்பது திரையிடுதல் சட்டத்தின்கீழ் குற்றமாகும் என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மத்திய தணிக்கைத் வாரியத்தின் வழிகாட்டுதல்களை திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கண்டிப்பாக கடைபிடிக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும், இதுதொடர்பாக தணிக்கை வாரியம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பில், கார்ட்டூன் படங்களைக் கூட 7 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்கக் கூடாது என்று விதி உள்ளதாகவும், ஆனால், இப்போதெல்லாம் வீடுகளில் சிறு குழந்தைகளும் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள், திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் 3 மாதங்களுக்குள் தொலைக்காட்சிகளில் வெளியாகிவிடும் நிலையில், எப்படி தடுப்பது என கேள்வி எழுப்பியதுடன், மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Also read... நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது வழக்கு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Madras High court, Theatre