ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கனல் கண்ணன்

கனல் கண்ணன்

இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால் அவர்  மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய  வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரவாயலில் நடைபெற்ற இந்து முன்னணி மாநாட்டில் ,இந்து முன்னணி  மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன்  பேசிய போது,  ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் எனப் பேசியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால் அவர்  மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து கனல் கண்ணனை கைது  செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் புகார்தாரரான குமரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து ஜந்து மாதங்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும்,உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு  நீதிபதி உத்தரவிட்டார்.

Also read... 2026-ல் நீங்கள் நாற்காலியில் அமர்ந்தால்.. விஜய்க்கு அரசியல் பேனர்.. கவனம் ஈர்க்கும் வாரிசு ரசிகர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kanal Kannan, Madras High court