ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அரவிந்த் சாமியின் படத்தை ஓடிடியில் வெளியிட இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்!

அரவிந்த் சாமியின் படத்தை ஓடிடியில் வெளியிட இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்!

ரெண்டகம் படத்தில் அரவிந்த் சாமி - குஞ்சாக்கோ போபன்

ரெண்டகம் படத்தில் அரவிந்த் சாமி - குஞ்சாக்கோ போபன்

ஃபெலினி இயக்கத்தில் தமிழில் ரெண்டகம் என்ற பெயரிலும், மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரிலும் இயக்கக்கப்பட்ட திரைப்படம் அண்மையில் வெளியானது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ரெண்டகம் படத்தை இந்தியாவில் ஓடிடி-யில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஃபெலினி இயக்கத்தில் தமிழில் ரெண்டகம் என்ற பெயரிலும், மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரிலும் இயக்கக்கப்பட்ட திரைப்படம் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் ரெண்டகம் திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாக இருந்த நிலையில் அதற்கு தடைக்கோரி சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், இந்த படத்தின் கதையை ஜாவா என்ற பெயரில் இயக்குவதற்காக நடிகர் அரவிந்த் சாமியிடம் கதை சொல்லியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கதையை பதிவு செய்து அதற்கான காப்புரிமை பெற்ற நிலையில் இதே கதை களத்துடன் தமிழில் ரெண்டகம் என்ற படம் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also read... முன்னாள் மிஸ் ஆந்திரா... ஐந்து வருடத்திற்குப் பின் நடிப்புக்கு திரும்பிய சத்தம் போடாதே பட நாயகி!

ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், ரெண்டகம் படத்தை ஓடிடி தளத்தில் இந்தியாவில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா பத்து லட்சம் ரூபாயை வரும் 10ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அன்றைய தினம் தள்ளி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Arvind Swami, Madras High court