நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், 'சாமானியன்' என்கிற பெயரில் படமெடுத்துள்ளனர். இந்த படத்தை ராகேஷ் என்பவர் இயக்க, இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு 'ஆர்ட் அடிக்ட்' நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் எனவர் "சாமானியன்" என்கிற பெயரில் படத்தை வெளியிட தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
2012ஆம் ஆண்டில் இந்த படத்தின் தலைப்பை பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருவதாகவும், அதே பெயரில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்பதால் 'சாமானியன்' என்கிற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எக்ஸட்ரா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, தாங்களும் அந்த படத்தின் தலைப்பை பதிவு செய்துள்ளதாகவும், அது ஏப்ரல் மாதம் வரை செல்லுபடியாகும் என்பதால் இந்த தலைப்பை பயன்படுத்தியதில் தவறில்லை என வாதிட்டர்.
படத்திற்கு 5 கோடி ரூபாயும், விளம்பரத்திற்காக ஒரு கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். பட தலைப்பிற்கு காப்புரிமை கேட்க முடியாது என்பதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment, Madras High court