Home /News /entertainment /

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு எதிரான கையாடல் வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு எதிரான கையாடல் வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விஷால்

விஷால்

இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, மேலாளர் ஹரிகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
நடிகர் விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு எதிரான கையாடல் வழக்கில் ஆறு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷாலின், விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணி புரிந்த பெண் கணக்காளர் ரம்யா, ஊழியர்களின் ஊதியத்துக்கான வருமான வரித்தொகை 45 லட்சம் ரூபாயை வரித்துறைக்கு செலுத்தி விட்டது போல போலி ஆவணங்களை காட்டி விட்டு, அத்தொகையை தனது உறவினர்களின் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது கடந்த 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், இறுதி அறிக்கை ஏதும் இதுவரை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, மேலாளர் ஹரிகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also read... டிசம்பர் 30ல் சென்னை சர்வதேச திரைப்பட விழா - தமிழில் கர்ணன், மாறா உள்ளிட்ட 11 படங்கள் தேர்வு!

இந்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 6 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

Also read...  அண்ணாத்த 50-வது நாளில் பாட்ஷா டயலாக் பேசிய ரஜினிகாந்த்!

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி