முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / யானை தந்தங்கள் தொடர்பாக நடிகர் மோகன்லால் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

யானை தந்தங்கள் தொடர்பாக நடிகர் மோகன்லால் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

மோகன்லால்

மோகன்லால்

நடிகர் மோகன்லால் வீடு, அலுவலகங்கள் உள்பட சில இடங்களில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 4 யானைத் தந்தங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் மோகன்லால் வீடு, அலுவலகங்கள் உள்பட சில இடங்களில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 4 யானைத் தந்தங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள்.

பின் அந்த தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர், மோகன்லாலிடம் நடத்திய விசாரணையில் யானை தந்தங்களை யானை வளர்ப்பவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியதாகத் தெரிவித்திருந்தார்.

வனத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் யானை தந்தங்கள் வைத்திருப்பது இந்திய வனபாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் கேரள மாநில வனத்துறை மோகன்லால் மீது பெரும்பாபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் கேரள அரசு மோகனால் உரிய அனுமதி முன்பே பெற்றுள்ளார் என்று கூறி அவர் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

Also read... கான் திரைப்பட விழா - கற்பிதங்களும் உண்மையும்

இந்நிலையில் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மக்கள் இயக்கத்துக்கான தேசிய கூட்டமைப்பின் இயக்குனர் விளயோடி வேணு கோபால் மற்றும் நிஜாமூதின், பி.கோபாலன் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

’போதிய ஆவணங்கள் இல்லாமல், யானை தந்தங்களை மோகன்லால் வைத்திருந்தார். இந்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக, கேரள வனத்துறைச் சட்டத்தை மீறியிருக்கிறது. மத்திய பொது தணிக்கைக்குழு அறிக்கையிலும் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூவின் வாதங்களை கேட்ட பின்னர்தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். 3 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Mohanlal