Home /News /entertainment /

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கும் சிம்பு...!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கும் சிம்பு...!

சிம்பு

சிம்பு

ஈஸ்வரன், மாநாடு என ஒரே வருடத்தில் இரண்டு படங்களை தந்த சிம்பு அடுத்தடுத்தப் படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

  • News18
  • Last Updated :
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார்.

ஈஸ்வரன், மாநாடு என ஒரே வருடத்தில் இரண்டு படங்களை தந்த சிம்பு அடுத்தடுத்தப் படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

சிம்பு நடிப்பில் அடுத்து வெந்து தணிந்தது காடு வெளியாக உள்ளது. கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இதையடுத்து கன்னடப் படத்தின் ரீமேக்கான பத்து தலயில் சிம்பு நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை கௌதம் கார்த்திக்கை வைத்து தொடங்கினர். விரைவில் சிம்பு அவருடன் இணைய உள்ளார்.

இந்தப் படத்துடன் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்திலும் நடிக்கிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போல் நகைச்சுவையுடன் தயாராகும் இந்தப் படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறார். இந்தப் படத்தை ஓ மை கடவுளே ரொமான்டிக் காமெடிப் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

Also read... ரைட்டர் படத்தை வாங்கி கணக்கை தொடங்கிய ஆகா தமிழ்...!

ஒருகாலத்தில் சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்க தயங்கிய பெருநிறுவனங்கள் சிம்புவிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக விரும்பி வந்து அவரை ஒப்பந்தம் செய்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் கோமாளி படத்தின் இயக்குனர் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தை தற்போது தயாரித்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Simbhu

அடுத்த செய்தி