பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் மேதகு படத்தை சீமான் தடுக்க நினைக்கிறாரா? வைரலாகும் ஆடியோ

மேதகு

மேதகு திரைப்படத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியாகி ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
கிட்டு இயக்கத்தில் ஜூன் 25ஆம் தேதி மேதகு என்ற திரைப்படம் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியானது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை இந்த படம் காட்சிப்படுத்தி இருக்கிறது. இதற்கு பல தரப்புகளில் இருந்தும் ஆதரவும் பெருகி வருகின்றன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் ஆடியோ வைரலாக பரவி வருகிறது.

அதில் அவர் நாம் கட்சியில் இருந்து விலக்கி விட்ட கிட்டு, கல்யாணசுந்தரம் ஆகியோர் சேர்ந்து இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவதாக பேசியிருக்கிறார். மேலும் என்னால் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட முடியாது. நீங்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பேசுகிறார். பிரபாகரனை இதில் தவறாகத்தான் சித்தரித்திருப்பார்கள் என்றும் சீமான் பேசியிருப்பதால் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. இது ஒருபுறம் சீமான் பேசியது தானா என்று ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் சீமானுக்கு எதிரான கண்டன குரல்கள் அதிகமாக தொடங்கி இருக்கின்றன.

ஒவ்வொரு முறை ஈழத்தமிழர்கள் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் திரைப்படங்கள் வெளியாகும் போது நாம் தமிழர் கட்சி குறுக்கிடுவது அவர்கள்தான் விடுதலைப்புலிகளுக்கு சொந்தம் என்பது போல இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியாகிய போதும் சீமான் கண்டனம் தெரிவித்தார். இந்தியில் வெளியான ஃபேமிலி மன் 2 வெப் சீரிஸ் விடுதலைப்புலிகளை தெளிவாக சித்தரிப்பதாக கூறி அதை தமிழில் வெளியாவதை சீமான் தடுத்து நிறுத்தினார். இந்தநிலையில் மேதகு என்ற திரைப்படம் பிரபாகரனின் இளவயது முதலான வாழ்க்கை வரலாறு தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கும் நிலையில் சீமானின் இந்த ஆடியோ தேவையற்றது என குரல்கள் எழுந்துள்ளன.
Published by:Karthick S
First published: