நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நடிகை காயத்ரி தனது நண்பரும், தொழிலதிபருமான 25 வயதான ரோகித் என்பவருடன் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்றார். ஆட்டம் பாட்டம் என களைகட்டிய ஹோலி கொண்டாட்டத்தில் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் மது அருந்தியதாகத் தெரிகிறது. துணை நடிகை காயத்ரியும், அவரது நண்பர் ரோகித்தும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
மாலை வேளையில் வீட்டிற்கு கிளம்பிய அவர்கள் காரில் புறப்பட்டனர். ரோகித் குடிபோதையில் கார் ஓட்ட காயத்ரி காரில் அமர்ந்து சென்றுள்ளார். கச்சிபௌலி அருகே, ஹெச்.எம்.டி மலைப் பகுதியில் காரை அதிவேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார் ரோகித். 'எல்லா' மருத்துவமனை அருகே தோட்டக்கார பெண் 38 வயதான மகேஸ்வரி என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது தறிகெட்டு வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் ஏறி மகேஸ்வரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து உருண்டு, அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துணை நடிகை காயத்ரி, தோட்டக்கார பெண் மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ரோகித் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயத்ரி, மகேஸ்வரி ஆகியோரின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயத்ரி உரிழப்புக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், கார்த்தி வெற்றி... பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரோஹித் குடிபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய ரத்தத்தில் ஆல்கஹால் செறிவு பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.