• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரையரங்குகளில் வெளியாகுமா ஓடிடியில் வெளியான சார்பட்டா, ஜகமே தந்திரம், நெற்றிக்கண் - வாய்ப்புகள் என்ன?

திரையரங்குகளில் வெளியாகுமா ஓடிடியில் வெளியான சார்பட்டா, ஜகமே தந்திரம், நெற்றிக்கண் - வாய்ப்புகள் என்ன?

சார்பட்டா, ஜகமே தந்திரம்

சார்பட்டா, ஜகமே தந்திரம்

ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை, ஜகமே தந்திரம், நெற்றிக்கண் போன்ற படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை பரவத் தொடங்கியது. அதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர், அந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி திரையரங்குகள் திறக்கப்பட்டன. தீபாவளிக்குத் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பெரிய படங்கள் எதும் ரிலீஸ் ஆகாததால் மக்கள் திரையரங்குகளுக்குச் செல்லவில்லை. அதனால், திரையரங்குகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய நிலையிலேயே இருந்தது.

    அதனையடுத்து, பொங்கலையொட்டி விஜய் நடித்த மாஸ்டர் படம் தமிழ்நாட்டில் வெளியானது. கொரோனா பரவல் காலத்திலும் அந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த கார்த்தியின் சுல்தான், தனுஷ் நடித்த கர்ணன் படங்களுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தியேட்டரில் கர்ணன் நன்றாக ஓட்டிக் கொண்டிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.

    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் நிலை காரணமாக கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று தமிழக அரசு திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதி அளித்ததுடன் அதற்கான கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவித்திருந்தது. அதனையடுத்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இருக்கைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக படம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளி விட்டு அமரும் விதமாக இருக்கைகளில் குறியீடுகள் அமைப்பது, கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டாலும், ரசிகர்களைக் கவரும் வகையில் பெரிய படங்கள் வெளியாவதற்கான வாய்ப்புகள் ஏதும் இப்போது இல்லை. எனவே, பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, திரையரங்குகள் மூடப்பட்டிருந்த இந்த இடைப்பட்டக் காலத்தில் வெளியான பெரிய திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸில் வெளியானது.

    இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் படத்தை நேரடியாக திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று தனுஷ் விரும்பினார். ஆனால், தயாரிப்பாளர் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியீடு செய்தார். அதனால், இருவருக்கும் இடையை மனக்கசப்பு உருவானது. இந்தநிலையில், அந்தப் படம் திரையரங்கில் வெளியாக வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதைப்போல, சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசானில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, அந்தப் படத்தின் மீம்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்தப் படத்தையும் திரையரங்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அதேபோல, நயன்தாராவின் நெற்றிக்கண் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்தத் திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது. ஏனெனில் கடந்தமுறை ஊரடங்கின் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பெரிய திரைப்படங்களான சூரரைப் போற்று, மலையாளப் படமான த்ரியஸ்ம்-2 போன்ற திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: