ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹாரிபாட்டர் படங்களில் ஹேக்ரிட்டாக ரசிகர்களைக் கவர்ந்த ராபி கால்ட்ரேன் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!

ஹாரிபாட்டர் படங்களில் ஹேக்ரிட்டாக ரசிகர்களைக் கவர்ந்த ராபி கால்ட்ரேன் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!

ஹாரி பாட்டர் நடிகர் ராபி கால்ட்ரேன் காலமானார்

ஹாரி பாட்டர் நடிகர் ராபி கால்ட்ரேன் காலமானார்

புகழ்பெற்ற ஹாரி பார்ட்டர் திரைப்பட தொடரில் நடித்த ராபி கால்ட்ரேன் 72 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaScotlandScotland

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜேகே ரவ்லிங் எழுதிய ஹாரி பாட்டார் என்ற புத்தகம் உலகில் மிக பிரபலமானது. மாயாஜால உலகை கதைக்களமாக கொண்டு பேசும் இந்த புத்தகம் குறிப்பாக சிறு வயது ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளது. உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவு விற்பனையான புத்தகம் என்றால் அது ஹாரி பாட்டர்தான். இத்தகைய பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற இந்த புத்தக தொடர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹாரி பாட்டர் சிறுவனமாக டேனியல் ராட்கிளஃப் நடித்தார்.

இந்த ஹாரிபாட்டர் திரைப்படத் தொடரில் முக்கியத்துவம் வாய்ந்த ரூபியஸ் ஹக்ரிட் பாத்திரத்தில் தோன்றி நடித்தவர் ராபி கால்ட்ரேன். ஹாரிபாட்டரின் 8 பாகங்களிலும் நீளமான தாடி, தொள தொள கோட் அணிந்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர்.

பிரிட்டனின் ஸ்காட்லாந்தை சேர்ந்த 72 வயதான ராபி கால்ட்ரேன், உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனிற்றி நேற்று காலமானார். ராபி கால்ட்ரேன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்க வேண்டிய ரஜினிகாந்த் படங்களின் லிஸ்ட் இதோ…

கால்ட்ரேனின் மறைவுக்கு எழுத்தாளர் ஜேகே ரவுலிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது "ராபி மிகச்சிறந்த திறமைசாலி. முழுமையான நபர். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்ட அவருடன் பழகியது, அவருடன் பணிபுரிந்தது எனக்கு கிடைத்த பேறு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் குறிப்பாக அவரது குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்றார்.

அதேபோல், ஹாரிபாட்டராக நடித்த டேனியல் ராட்கிளஃப்பும் தனது இரங்கல் பதிவில்," நான் சந்தித்திலேயே மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்ட மனிதர் ராபி. நான் சிறுவனாக அவருடன் நடித்த போது செட்களில் சிரித்து மகிழ்ந்து சந்தோஷமாக இருப்போம். அந்த நினைவுகள் என்றும் மறாவது. ராபி ஒரு சிறந்த நடிகர் அன்பான மனிதர்" என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actor, Cinema, Hollywood, Scotland