இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் முதல் மியூசிக் வீடியோவான வாடி வாடி பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது.
மின்னலே, கஜினி வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப் படங்களுக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் சமீபகாலமாக பெரிய அளவில் எந்த திரைப்படத்திற்கும் இசையமைக்காமல் உள்ளார். அவர் இசையில் தற்போது லெஜென்ட் என்ற திரைப்படம் மட்டும் வெளியாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் திரைப்படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வந்ததால் மியூசிக் வீடியோக்களுக்கு இசையமைப்பதை தவிர்த்தார். ஆனால் தற்போது கார்த்திக் குமார் என்பவர் இயக்கும் 'வாடி வாடி' என்ற மியூசிக் வீடியோவிற்கு ஹாரிஸ் ஜெயராஜ் முதன்முதலாக இசையமைத்துள்ளார்.
வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்
அந்தப் பாடலுக்கு மேடைப்பேச்சு மூலம் சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி அஸ்வின் நாயகனாக நடித்துள்ளார். அதேபோல கேரளாவை சேர்ந்த அஞ்சு குரியன் நாயகியாக நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியிருக்கும் 'வாடி வாடி' பாடலை விவேகா எழுத பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் வாடி வாடி பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் பாடலைத் தொடர்ந்து இதே கூட்டணியில் உருவாகும் மக்கா மக்கா பாடலும் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தப்பாடல் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.