மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் ஒன்றுக்கு இத்தனை நாள் அர்த்தம் தெரியாமல் இருந்தாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், த்ரிஷா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் 'சாமி'. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படமும் அதில் இடம் பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. விக்ரம், த்ரிஷா இருவருக்குமே சாமி படத்தின் மூலம் ரசிகர்கள் அதிகரித்தனர்.
முற்போக்கு சிந்தனையுடன் விவேக் பேசிய காமெடி வசனங்கள் கைதட்டல்களைப் பெற்றன. சாமி படத்தில் விக்ரமின் அறிமுகப் பாடலாக, ‘திருநெல்வேலி அல்வா டா’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் வரிகளை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார். இந்த பாடலுக்காக அவர் 2 நாட்கள் திருநெல்வேலியில் தங்கியிருந்து அங்குள்ள முக்கியமான விஷயங்களை அறிந்து அதன் அடிப்படையில் எழுதியதாகக் கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!
இந்தப் பாடலில் ‘பாளையங்கோட்டையில் ஜெயிலு பக்கம் ரயிலு கூவும்’ என்ற வரி இடம்பெற்றிருக்கும். அதாவது பாளையங்கோட்டை சிறைச்சாலையை ஒட்டி ரயில் தண்டவாளம் இருக்கும், ரயில் அதில் போகும் போது அடிக்கடி அதன் சத்தம் கேட்கும் என்பதைத்தான் முத்துக்குமார் அவ்வாறு குறிப்பிட்டிருப்பார்.
I Didn’t know till today. Thanks to @namuthu_k
— Harris Jayaraj (@Jharrisjayaraj) September 20, 2022
தற்போது அந்த வரியையும் அதற்கேற்ற வீடியோவையும் இணைத்து ட்விட்டரில் பதிவிட்ட பயனர் ஒருவர், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு டேக் செய்திருந்தார். அதைப் பார்த்த ஹாரீஸ், ‘இவ்வளவு நாள் இதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. நன்றி’ என பதிலளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Harris Jayaraj, Na Muthukumar