நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடையது காதல் திருமணம் அல்ல, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இளம் நடிகரான ஹரிஷ் கல்யாணுக்கு நாளை (அக்டோபர் 28) சென்னையில் திருமணம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் அவர் நர்மதா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்கிறார் என்று செய்திகள் பரவி வந்தன.
விக்ரம் படத்தின் 100வது நாள்.. கலைவாணர் அரங்கில் கொண்டாட்டத்துக்கு தயாராகும் படக்குழு!
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஹரிஷ் கல்யாண் பேசினார். அப்போது சென்னைக்கு அருகே உள்ள திருவேற்காட்டில் தனக்கும் நர்மதாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் இணையதளங்களில் தன்னுடைய திருமணம் காதல் திருமணம் என செய்திகள் பரவுகின்றன. அது முற்றிலும் தவறான செய்தி. தன்னுடைய திருமணம் பெரியோர்களால் பேசி முடிக்கப்பட்ட திருமணம் என்றும் தெரிவித்தார். அத்துடன் பெரியோர்களால் பேசி முடிக்கப்பட்டு இருந்தாலும், தங்கள் இருவருக்கும் பிடித்துப் போகவே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.
ஹரிஷ் கல்யாண்
பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் தான் ஹரிஷ் கல்யாண். அவர் 2010-ல் 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார். இதற்கிடையே ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியானது.
இது தொடர்பாக அப்போது சோஷியல் மீடியாவில் பதிவிட்ட ஹரிஸ், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள். குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கன்/பத்திரிக்கை நண்பர்கள். எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Harish kalyan