எனக்கு ஃபேன்ஸ் யாரும் இருக்கீங்களா? ... ஹரிஷ் கல்யாண் சந்தேகம்!

எனக்கு ஃபேன்ஸ் யாரும் இருக்கீங்களா? ... ஹரிஷ் கல்யாண் சந்தேகம்!
நடிகர் ஹரிஷ் கல்யாண்
  • Share this:
இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விக்கி டோனர் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள படம் தாராள பிரபு.

இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக பணியாற்றிய கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நடிகை சச்சு, நடிகர் விவேக், ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் மார்ச் 13-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகை சச்சு, விவேக், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


அப்போது பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி. காதல் கதைகளில் நடித்த எனக்கு இந்தப் படத்தின் கதையை படித்த போது திருப்திகரமாக இருந்தது. எனவே ஒரு வித்தியாசமான கதையில் நடிக்க விரும்பினேன். எந்த விதத்திலும் தவறான விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்காது. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாகத் தான் தாராள பிரபு இருக்கும். சச்சு, விவேக் உள்ளிட்ட 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்தது எனக்கு நல்ல கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவமாக இருந்தது.

இசையின் மூலம் படத்தின் கதையை ரசிகர்களுக்கு கடத்த நினைத்ததால் தான் இந்தப் படத்தில் 8 இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்தோம். எனக்கு இந்தப் படத்தின் மூலம் செல்வா என்ற நல்ல ஒளிப்பதிவாளர் கிடைத்திருக்கிறார்” என்றார்.

மேலும் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி சொன்ன ஹரிஷ் கல்யாண், எனக்கு யாராவது ரசிகர் என்று ஒன்றிரண்டு பேர் இருந்தால் அவர்களுக்கும் நன்றி என்று சந்தேகத்துடன் கூறினார்.மேலும் படிக்க: கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நடிகரின் மகன் கைது!
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading